மொழி

| | 1 comments

என்னது அன்பை சொல்ல ,
வார்த்தைகளை தேடினேன்
எதுவும் என் அன்பை சொல்வது போல் இல்லை.
நான் சொல்லாமலே என் அன்பை நீ அறிந்தாய்
பிறகு தான் தெரிந்தது அன்பை சொல்ல
வார்த்தை தேவை இல்லை ,உணர்வுகள் போதும் என்று .

- செந்தில்குமார்

புன்னகை

| | 2 comments

எத்தனை முறை தோற்றாலும் ,
மீண்டும் மீண்டும் தோற்கத்தான் தோன்றுகிறது,
உன்னிடம் மட்டும் - மகனே உன் புன்னகைகாக

- செந்தில்குமார்

புதிய புன்னகை

| | 0 comments

நேற்று பார்த்தே அதே ரோஜா
பிறந்ததிலிருந்து பார்க்கும் சூரியன்
எபோழுதும் பார்க்கும் மலை முகடு
இன்று மட்டும் ஏன் புதிதாய் புன்னகைகிறது ?
நீ புன்னகை எனும் ஸ்பரிசத்தால் துயில் எழுபியதாலோ?
என் உள்ளிருந்து பார்ப்பதும் உன்
புன்னகைதானோ ?
என் மகனெனும் வரமே !!!
- செந்தில்குமார்

அன்னையின் ஆணை

| | 0 comments

தொட்டு பார்க்க ஆசைதான்
தொட்டால் அழ மாட்டாயே ?
கொஞ்சம் அமைதியை - இரு
ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுத்து கொள்ளிகிறேன்
யாரிடமும் சொல்லிவிடதே
மிக முக்கியமாக - என்னவளிடம்
ஆம் வெளியிலிருந்து வந்தவுடன்
உன்னை தொட கூடாதம் - உன்
அன்னையின் ஆணை !!!

- செந்தில் குமார்