மீண்ட சொர்க்கம்

| | 2 comments


கவலைகள் மறைய கண்டேன்
கண்ணீர் காற்றில் கரைய கண்டேன்
நீ தந்த பாசம் நெஞ்சில் உலவ கண்டேன்
உன் பாச துளிகள்
மீண்டும் என்னை உயிர்பிக்க கண்டேன்
எனக்கு பாசமெனும் தோள் தந்த
தமையா - உன்னால் !!!

காத்திருக்கிறேன்

| | 0 comments

ஊர் ,உறவு ,நட்பு புடைசூழ வாழ்த்திய போது
வசந்தத்தின் வாசல் திறந்து விட்டது என்றுதான் - நினைத்திருந்தேன்
வாசல் நுழையும் முன்னே புயல் ,
வரும் என்று யாரறிவார்!!!
நாம் நாளைய சரித்திரத்தில் இடம் பெற வேண்டாம்
என்னுள் நீ உன்னுள் நான் முழுதாய் வந்தமர்ந்தாள் போதுமடி
என்னுடைய விசும்பல்களை நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லைதான் - காரணம்
உன்னுள் இருபது நீ , நீ மட்டுமே
எனக்கும் சிறிது இடம் கொடுத்துப்பார் -அப்போது புரியும்
எனது அன்பும், காதலும்
வலிக்கிறதடி காரணம் நீயா இல்லை நானா ?
உன்னில் அன்பை தேடி -தேடி கனத்து விட்டது மனம்
காத்திருக்கிறேன் காலத்தை கண்ணீரில் - கரைத்து கொண்டு !!!
என்றேனும் புரிதல் தோன்றும் என்ற நம்பிக்கையில் .

ஞானத்தை தேடி

| | 0 comments

எல்லோருக்கும் ஞானம் பெற
ஆசைதான்
தேடவும் செய்கிறார்கள்
புத்தனின் போதனைகளை - அல்ல
அவர் ஞானம் பெற்ற
போதி மரத்தை தேடி
பாவம் இதில் போதி மரம்
ஏதும் செய்யவில்லை என்று
தெரியாமலேயே

காதல்

| | 0 comments

இதழ்கள் பேசும்
கண்கள் பேசும்
கைகள் கூட பேசும் - ஆனால்
இன்று தான் கூந்தல் பேச காண்கிறேன்
பெண்ணே நீ சிக்கெடுத்து வீசிய
கூந்தலுடன் நான் பேசும் போது
இது தான் காதலா?

- செந்தில் குமார்