தமையன் எனும் தாய்

| | 0 comments

காய பட்ட இதயத்துக்கு
உன் அன்பெனும் மருந்திட்டாய்
நான் இளைப்பாற
உன் தோள் தந்தாய்
என்னை எனக்காக வாழ சொன்னாய்
தமையனாய் வந்து என்
துன்பம் கலைந்தாய்
தாயாய் வந்தென்னை ஆட்கொண்ட தமையா
மீண்டும் ஒரு ஜென்மம் எனில்
உனக்கு தனயனாகும் வரம் தா!!!

நிம்மதி

| | 0 comments

எங்கெங்கோ தேடினேன்
ஒவ்வொரு பொருளிலும்
உயிரிலும் தேடினேன்
தொலைத்த இடம் தெரியமல்
யாரோ சொன்னார்கள்
என்னுள் தான்
தொலைத்திருப்பேன் என்று
இருக்கலாம் ஆனால்
எனக்கு என்னுள் தேட
தெரியவில்லையே!!! .