தேவதை
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 12:43 AM | 0 commentsஅந்தி மாலை கதிரவன்
அழகு நிலா பவனி
அந்தி மலரும் அல்லி
மதி மயக்கும் முல்லை
கூடு திரும்பும் பறவை கூட்டம்
இவை யாவும் காத்திருக்கின்றன
விளக்கொளியில் என் தேவதை
நின் திருமுகம் காண - நானும் தான்
மேகம்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 1:56 AM | 0 commentsபுவிதனை குளிர்விக்க
வானெங்கும் ஒளி விளக்கேற்றி
மேல தாளம் முழங்கிட
நின் கரம் நான் பற்ற
நீயோ நாணம கொண்டு
காற்றோடு ஓடுகிறாய்
உன்னை பின்தொடர்ந்து
அனைத்தில் நீ என்னுள்ளும்
நான் உன்னுள்ளும்
உருகி இணைகிறோம் .
Subscribe to:
Posts (Atom)