எதிர்பார்பற்ற அன்பு

| | 2 comments

அன்பெனும் ஒற்றை
வார்த்தையை நோக்கிய
பாலை வன பயணங்களில் ,
தேவைகளை சுருக்கி
உடல் வருத்தி ,செய்த உதவிக்கு
எதிர்பார்பற்ற அன்பு என
நாமாகரணம் சூட்டி
என்னை எட்டி நிறுத்தி
வேடிக்கை பார்கிறது உலகம் .

உறவுகள்

| | 0 comments

உயிர் கண்ட உறவுகளின்
சிறு துளி கண்ணீரும் ,
ஆழி புயல் என நெஞ்சில்
மையம் கொள்கின்றன .

அழகன்

| | 0 comments

சிற்பங்களும் சிந்தை மயங்கிடும்
உன் சிறு புன்னகை கண்டு
நான் எம்மாத்திரம் ?
உன் இதழ் உதிர்க்கும்
ஒவ்வொரு சிறு வார்த்தைகளும்
என்னுள் காவியமாகின்றன .
| | 0 comments

வாழ்வின் எனக்கான
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
தனிமையில் கழிகின்றன,
கானல் நீராகி போன காதலை எண்ணி.

காமத்தீ

| | 0 comments

நான் ஏற்றா வில்லென கண்களும்
நேர் நோக்கா குனிந்த முகமும் என
அழகியலின் அத்துணை அம்சமும்
அடங்கிய பெண் ஓவியம் நீயடி ,
ஒவ்வொரு முறை
படிக்கும் போதும் ,
புதிரான அர்த்தம
தரும் கவிதையும்.
அன்பிலகனத்தின் அர்த்தமுமாய் ,
என்னுள் யாவுமகி நிற்கிறாய் .
காமத்தீயை நம் உடலோடு
உடல் பொருத்தி அணைத்து விட்டோம்,
காதலின் அருமை உணர்வித்த
உன்னை பிரிய இயலாமல்
எனது கடமைக்காக செல்கிறேன்
மலர்ந்த முகத்தோடு வழி அனுப்பு .
உன் கணவன் வரும் முன்.
| | 0 comments

மழை நின்ற வானத்தின் ,சிறு தூறல் ஒன்றினை
கையிரென கொண்டு பேரண்ட வெளியிணை
அடைய முயர்த்சித்ததில் எதிரே வந்த தூறல் ஒன்றின்
நுனி பட்டு தவறி விழுந்தேன் .விழுந்த இடம் மேலும்பி
பறக்க நினைக்கும் பறவையின் சிறகென்பதாள் .
இட்சிறகை பற்றி கொண்டே பேரண்ட வெளியிணை
அடைய பயணம் கொள்கிறேன் .
| | 0 comments

ஒரு நாளில் அரைகுறையாய் வாழ்ந்ததில்
என்னுள் முழுதாய் மெல்ல உள்ளே வந்து விட்டாய்
என்னையும் அறியாமல் ,நீ வகுத்த வரையறை கண்டு
கால தேவனின் ஓட்டத்தை ,பன் முறை பெருக்க
எண்ணி அவன் பின் ஓட முயன்றேன் ,
அவனோ மோகம் கொண்ட காதலனாய்
வினாடிகளை ஸ்தம்பிக்க செய்து
என்னை கொள்ளாமல் கொள்கிறான்