வரம்

| | 0 comments

 ஆயிரம் கவலையோடு வீடு 
திரும்பினும் - மகிழ்ச்சியில் 
உறைகிறது நெஞ்சம் 
உன் அர்த்தமற்ற உளறல்களில்
காற்றோடு கரைந்து போகிறேன் 
உன் சிறு தீண்டலில்
நீ அன்பின் மிகுதியில் கொடுக்கும்
முத்தத்திற்காக ஓராயிரம் வருடம் 
காத்திருப்பினும் தகும் 
மகன் எனும் வரமே

தேவதை

| | 0 comments


அந்தி மாலை கதிரவன்
அழகு நிலா பவனி
அந்தி மலரும் அல்லி
மதி மயக்கும் முல்லை
கூடு திரும்பும் பறவை கூட்டம்
இவை யாவும் காத்திருக்கின்றன
விளக்கொளியில் என் தேவதை
நின் திருமுகம் காண - நானும் தான்

மேகம்

| | 0 comments


புவிதனை குளிர்விக்க
வானெங்கும் ஒளி விளக்கேற்றி
மேல தாளம் முழங்கிட
நின் கரம் நான் பற்ற
நீயோ நாணம கொண்டு
காற்றோடு ஓடுகிறாய்
உன்னை பின்தொடர்ந்து
அனைத்தில் நீ என்னுள்ளும்
நான் உன்னுள்ளும்
உருகி இணைகிறோம் .

முறிவு

| | 0 comments

நம் உள்ளம விரதம்
கலைக்க முற்பட்டபோதும்
மௌனம வித்திட்ட
விரிசல்களின் இடைவெளிகள்
மௌனம இட்டே
நிரப்ப விழைகின்றன இதழ்கள்
பின் காரணமே இன்றி
சந்தையில் விலை
பேசபடுகின்றன நமக்குள்
ஏற்பட்ட உறவினை முறிக்க

அர்த்தமுள்ள பயணங்கள்

| | 0 comments


உனை கான எத்தனிக்கும்
ஒவ்வொரு பயணத்திலும்
என் மீது மோதும் காற்றின்
அழுத்தம் தாளாமல்
நெஞ்சில் பீறிட்டு எழும்
வார்த்தைகளை சற்றும் பிசகாமல்
கோர்வையாக்கி எழுத முயர்சிப்பதில்
உருவாகும் வரிகள் அனைத்தும்
புது கவிதையென மிளிர்கிறது

இப்பொழுது எல்லாம் பயண முடிவில்
நான் காணும் உனது புன்னகை
முகத்திற்கான பயணங்கள் மட்டுமே
அர்த்தமுள்ளதாய் தோன்றுகின்றன

சிறு பிரிவுக்கு பின் சேர்ந்ததில்
ருசிக்கும் இன்பங்களை மிக
சிரத்தையோடு சேமித்து கொள்கிறேன்
அடுத்த பிரிவின் போது
அசை போட வேண்டுமென

உண்மை அன்பின் நிலை

| | 0 comments

உண்மை அன்பினை தேடி அலைந்ததில்
அரும்பிய புதிய உறவுகள் அனைத்தும்
நமது வலிகளில் இன்பம் காணும்
உன்னத நிலையை அமைய பெற்றவை
தன்னை உருக்கி வெளிச்சம் காட்டும்
...மெழுகாய் இருக்கும் வரை மட்டுமே
உறவுகளின் அன்பும் பாசமும்.

எங்கு செல்கிறோம்

| | 2 comments


உணவுக்காக உழும் போதும்
நீருக்காக தோண்டும் போதும்
அமைதியாய் அரவணைதவள்
தான் கண்ட இடம் எங்கும்
இயந்திரம் கொண்டு ஆழ்துளை
அமைத்து நில மகளினை ஆழம்
பார்க்க நினைத்ததன் பயனாய்
தன் ருத்ர தாண்டவம் காட்டி
தன் நிலை விட்டு சற்றே விலகி நிற்கிறாள்
நிதானமாய் உருகி நதியாய் வளம் சேர்த்த
வெள்ளி பனி மலையரசி மரம் இன்றி
பாலைவன மாகி போன காடுகளை கண்டு
சற்றே வேகம் கொண்டு கடலோடு கலந்து
ஆழி பேரலையென ஆர்பரிகிறாள்.
இவை இன்றி , நாம் கண்ட அறிவியலே
காற்றாய் மழையாய் விஸ்வருபம் கொண்டு
நம்மையே அழிக்க பரவி திரிகிறது ...
போதுமா?? எதை நோக்கிய பயணம் இது ?