எங்கு செல்கிறோம்

| |


உணவுக்காக உழும் போதும்
நீருக்காக தோண்டும் போதும்
அமைதியாய் அரவணைதவள்
தான் கண்ட இடம் எங்கும்
இயந்திரம் கொண்டு ஆழ்துளை
அமைத்து நில மகளினை ஆழம்
பார்க்க நினைத்ததன் பயனாய்
தன் ருத்ர தாண்டவம் காட்டி
தன் நிலை விட்டு சற்றே விலகி நிற்கிறாள்
நிதானமாய் உருகி நதியாய் வளம் சேர்த்த
வெள்ளி பனி மலையரசி மரம் இன்றி
பாலைவன மாகி போன காடுகளை கண்டு
சற்றே வேகம் கொண்டு கடலோடு கலந்து
ஆழி பேரலையென ஆர்பரிகிறாள்.
இவை இன்றி , நாம் கண்ட அறிவியலே
காற்றாய் மழையாய் விஸ்வருபம் கொண்டு
நம்மையே அழிக்க பரவி திரிகிறது ...
போதுமா?? எதை நோக்கிய பயணம் இது ?