| | 0 comments

வாழ்வின் எனக்கான
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
தனிமையில் கழிகின்றன,
கானல் நீராகி போன காதலை எண்ணி.

காமத்தீ

| | 0 comments

நான் ஏற்றா வில்லென கண்களும்
நேர் நோக்கா குனிந்த முகமும் என
அழகியலின் அத்துணை அம்சமும்
அடங்கிய பெண் ஓவியம் நீயடி ,
ஒவ்வொரு முறை
படிக்கும் போதும் ,
புதிரான அர்த்தம
தரும் கவிதையும்.
அன்பிலகனத்தின் அர்த்தமுமாய் ,
என்னுள் யாவுமகி நிற்கிறாய் .
காமத்தீயை நம் உடலோடு
உடல் பொருத்தி அணைத்து விட்டோம்,
காதலின் அருமை உணர்வித்த
உன்னை பிரிய இயலாமல்
எனது கடமைக்காக செல்கிறேன்
மலர்ந்த முகத்தோடு வழி அனுப்பு .
உன் கணவன் வரும் முன்.
| | 0 comments

மழை நின்ற வானத்தின் ,சிறு தூறல் ஒன்றினை
கையிரென கொண்டு பேரண்ட வெளியிணை
அடைய முயர்த்சித்ததில் எதிரே வந்த தூறல் ஒன்றின்
நுனி பட்டு தவறி விழுந்தேன் .விழுந்த இடம் மேலும்பி
பறக்க நினைக்கும் பறவையின் சிறகென்பதாள் .
இட்சிறகை பற்றி கொண்டே பேரண்ட வெளியிணை
அடைய பயணம் கொள்கிறேன் .
| | 0 comments

ஒரு நாளில் அரைகுறையாய் வாழ்ந்ததில்
என்னுள் முழுதாய் மெல்ல உள்ளே வந்து விட்டாய்
என்னையும் அறியாமல் ,நீ வகுத்த வரையறை கண்டு
கால தேவனின் ஓட்டத்தை ,பன் முறை பெருக்க
எண்ணி அவன் பின் ஓட முயன்றேன் ,
அவனோ மோகம் கொண்ட காதலனாய்
வினாடிகளை ஸ்தம்பிக்க செய்து
என்னை கொள்ளாமல் கொள்கிறான்
| | 0 comments

நிகழ்கால நிதர்சனங்களின் முன்
கடந்தகால நினைவுகள் அனைத்தும்
கட்டாயத்தின் பேரில் கல்லறைக்கு அனுப்ப படுகின்றன.
கால மாற்றத்தில் அற்புதங்கள் ,அர்பங்கலாகவும்
அர்பங்கள் அற்புதங்கலாகவும் உருமாறி கொள்கின்றன.

காதல்

| | 0 comments

உன் மனதை மௌனங்களால் பூட்டி
வைத்து , என்னுள் பூகம்பளுகுக்கான
அறிகுறியை கொணர்கிறாய் .
உன் மௌனம திறக்கும் சாவியை
தேடுவதிலேய எனது நாட்கள் நகர்கின்றன

அருவமாகி போன நினைவுகள் அத்துனையும்
உருவம் கொண்டு உயிர் வாழ துடிக்கின்றன
நீ சொன்ன வார்த்தை கேட்டு .

காமமா இல்லை காதலா ?

| | 0 comments

காமம் தின்ற எச்சத்தில் பிறந்தது காதல் என்பதா?
இல்லை காதல் தின்ற எச்சத்தில் பிறந்தது காமம் என்பதா ?
இப்படி விடை காணமுடியா முடிச்சுகளின் மத்தியில்
என்னை பிணை கைதியாக்கி காலவரைகள் நிர்ணயித்து
என்னுள் எதை தேடுகிறாய் ?

இடைவெளிகள்

| | 0 comments

உனக்கும் எனக்குமான இடைவெளியில்
முன் பனி காலத்தின் மேக பனி
மூட்டங்கள் நிறைந்து உன்னை தழுவி இருபினும்
நீயே மையமென சுற்றிவரும் எனது ஒளி சிதறல்கள்.
என்றேனும் உன்னை வந்தடையும் என்றே எண்ணுகிறேன்
மூட்டங்கள் விலகும் அந்நாள்
நிலவற்ற வானாய் இருந்து விட கூடாதென்பதே
எனது வேண்டுதல் .

வாடகை மனைவி

| | 0 comments

என்னை உயிர் என்பர் ,உணர்வென்பர்,
சகலமும் நீ என்பார், அன்றைய இரவுக்காக !!!
ஒவ்வொரு இரவும் மாறுகிறது எனக்கான காதலும்
காதலர்களும்,எனது வாழ்நாளும் நகர்கிறது
சில நீள் செவ்வக காகிதங்களை நோக்கி

விடை கொடு

| | 0 comments

ஒரு சில வினாடிகளே ஆயினும்
மகிழ்வின் உச்சத்தையும்
வெறுமையின் கொடுமையையும்
ஒரு சேர உணர்ந்து விட்டு
செயற்கையாய் ஒரு புன்னகை சிந்தி
கடக்க இயலா நெடும் பயணத்தை தொடர்ந்துவிட்டேன்
விநாடி முள்கள் இதையத்தை பதம் பார்ப்பதையும் மறைத்து