இடைவெளிகள்

| |

உனக்கும் எனக்குமான இடைவெளியில்
முன் பனி காலத்தின் மேக பனி
மூட்டங்கள் நிறைந்து உன்னை தழுவி இருபினும்
நீயே மையமென சுற்றிவரும் எனது ஒளி சிதறல்கள்.
என்றேனும் உன்னை வந்தடையும் என்றே எண்ணுகிறேன்
மூட்டங்கள் விலகும் அந்நாள்
நிலவற்ற வானாய் இருந்து விட கூடாதென்பதே
எனது வேண்டுதல் .

0 comments: