உண்மை அன்பின் நிலை
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 11:16 PM | 0 commentsஉண்மை அன்பினை தேடி அலைந்ததில்
அரும்பிய புதிய உறவுகள் அனைத்தும்
நமது வலிகளில் இன்பம் காணும்
உன்னத நிலையை அமைய பெற்றவை
தன்னை உருக்கி வெளிச்சம் காட்டும்
...மெழுகாய் இருக்கும் வரை மட்டுமே
உறவுகளின் அன்பும் பாசமும்.
எங்கு செல்கிறோம்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 2:23 AM | 2 commentsஉணவுக்காக உழும் போதும்
நீருக்காக தோண்டும் போதும்
அமைதியாய் அரவணைதவள்
தான் கண்ட இடம் எங்கும்
இயந்திரம் கொண்டு ஆழ்துளை
அமைத்து நில மகளினை ஆழம்
பார்க்க நினைத்ததன் பயனாய்
தன் ருத்ர தாண்டவம் காட்டி
தன் நிலை விட்டு சற்றே விலகி நிற்கிறாள்
நிதானமாய் உருகி நதியாய் வளம் சேர்த்த
வெள்ளி பனி மலையரசி மரம் இன்றி
பாலைவன மாகி போன காடுகளை கண்டு
சற்றே வேகம் கொண்டு கடலோடு கலந்து
ஆழி பேரலையென ஆர்பரிகிறாள்.
இவை இன்றி , நாம் கண்ட அறிவியலே
காற்றாய் மழையாய் விஸ்வருபம் கொண்டு
நம்மையே அழிக்க பரவி திரிகிறது ...
போதுமா?? எதை நோக்கிய பயணம் இது ?
பருவகாலங்கள்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 2:42 AM | 0 commentsகோடையின் வெம்மையும்
இளவேனில் காலத்து வசந்தமும்
கூதிரின் பிரிவும் என தினம்
மாறும் பருவகாலங்கள் என்னுள் .
ஐயம்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 1:54 AM | 0 commentsசற்று நில் ஒரு ஐயம்
இன்னும் சற்று தூரத்தில் தான்
நீ வீழும் இடம் , ஆர்பரித்து ,
துள்ளி விளையாடி,
செல்லும் இடம் எல்லாம் வனப்புகளை
காட்டி விட்டு ,உலகம் மறந்து வருகிறாய்
தெரிந்து தான் வருகிறாயோ ?
எங்கே கற்று கொண்டாய்
விழுந்தவுடன் எழுவதற்கு
எனக்கும் கற்று கொடு
திருடர்கள் ஜாக்கிரதை
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 1:18 AM | 0 commentsஒரு நொடி இன்பதாலும் ஓர் ஆயிரம்
வலிகளாலும் உன்னை பிணைத்து விட்டு
உனது நித்திரையை நிம்மதியையும் களவாடி
கொண்டு போகிறார்கள் .
தனிமை
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 2:28 AM | 2 commentsஉன்னோடு கழிக்கும் நாட்கள் கூட
மின்னல் என மின்னி மறைகின்றன
வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல்
உன்னை பிரிந்து இருக்கும் சில நிமிடங்கள் கூட
பாலை வன நெடும் பயணமென
முன்னேற மறுக்கின்றன
எதிர்பார்பற்ற அன்பு
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 2:23 AM | 2 commentsஅன்பெனும் ஒற்றை
வார்த்தையை நோக்கிய
பாலை வன பயணங்களில் ,
தேவைகளை சுருக்கி
உடல் வருத்தி ,செய்த உதவிக்கு
எதிர்பார்பற்ற அன்பு என
நாமாகரணம் சூட்டி
என்னை எட்டி நிறுத்தி
வேடிக்கை பார்கிறது உலகம் .
அழகன்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 8:25 PM | 0 commentsசிற்பங்களும் சிந்தை மயங்கிடும்
உன் சிறு புன்னகை கண்டு
நான் எம்மாத்திரம் ?
உன் இதழ் உதிர்க்கும்
ஒவ்வொரு சிறு வார்த்தைகளும்
என்னுள் காவியமாகின்றன .
Subscribe to:
Posts (Atom)