காத்திருக்கிறேன்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 9:56 PM | 0 commentsஊர் ,உறவு ,நட்பு புடைசூழ வாழ்த்திய போது
வசந்தத்தின் வாசல் திறந்து விட்டது என்றுதான் - நினைத்திருந்தேன்
வாசல் நுழையும் முன்னே புயல் ,
வரும் என்று யாரறிவார்!!!
நாம் நாளைய சரித்திரத்தில் இடம் பெற வேண்டாம்
என்னுள் நீ உன்னுள் நான் முழுதாய் வந்தமர்ந்தாள் போதுமடி
என்னுடைய விசும்பல்களை நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லைதான் - காரணம்
உன்னுள் இருபது நீ , நீ மட்டுமே
எனக்கும் சிறிது இடம் கொடுத்துப்பார் -அப்போது புரியும்
எனது அன்பும், காதலும்
வலிக்கிறதடி காரணம் நீயா இல்லை நானா ?
உன்னில் அன்பை தேடி -தேடி கனத்து விட்டது மனம்
காத்திருக்கிறேன் காலத்தை கண்ணீரில் - கரைத்து கொண்டு !!!
என்றேனும் புரிதல் தோன்றும் என்ற நம்பிக்கையில் .
ஞானத்தை தேடி
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 1:01 AM | 0 commentsஎல்லோருக்கும் ஞானம் பெற
ஆசைதான்
தேடவும் செய்கிறார்கள்
புத்தனின் போதனைகளை - அல்ல
அவர் ஞானம் பெற்ற
போதி மரத்தை தேடி
பாவம் இதில் போதி மரம்
ஏதும் செய்யவில்லை என்று
தெரியாமலேயே
காதல்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 11:25 PM | 0 commentsஇதழ்கள் பேசும்
கண்கள் பேசும்
கைகள் கூட பேசும் - ஆனால்
இன்று தான் கூந்தல் பேச காண்கிறேன்
பெண்ணே நீ சிக்கெடுத்து வீசிய
கூந்தலுடன் நான் பேசும் போது
இது தான் காதலா?
- செந்தில் குமார்
மொழி
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 4:55 AM | 1 commentsஎன்னது அன்பை சொல்ல ,
வார்த்தைகளை தேடினேன்
எதுவும் என் அன்பை சொல்வது போல் இல்லை.
நான் சொல்லாமலே என் அன்பை நீ அறிந்தாய்
பிறகு தான் தெரிந்தது அன்பை சொல்ல
வார்த்தை தேவை இல்லை ,உணர்வுகள் போதும் என்று .
- செந்தில்குமார்
வார்த்தைகளை தேடினேன்
எதுவும் என் அன்பை சொல்வது போல் இல்லை.
நான் சொல்லாமலே என் அன்பை நீ அறிந்தாய்
பிறகு தான் தெரிந்தது அன்பை சொல்ல
வார்த்தை தேவை இல்லை ,உணர்வுகள் போதும் என்று .
- செந்தில்குமார்
புன்னகை
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 4:53 AM | 2 commentsஎத்தனை முறை தோற்றாலும் ,
மீண்டும் மீண்டும் தோற்கத்தான் தோன்றுகிறது,
உன்னிடம் மட்டும் - மகனே உன் புன்னகைகாக
மீண்டும் மீண்டும் தோற்கத்தான் தோன்றுகிறது,
உன்னிடம் மட்டும் - மகனே உன் புன்னகைகாக
- செந்தில்குமார்
புதிய புன்னகை
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 4:52 AM | 0 commentsநேற்று பார்த்தே அதே ரோஜா
பிறந்ததிலிருந்து பார்க்கும் சூரியன்
எபோழுதும் பார்க்கும் மலை முகடு
இன்று மட்டும் ஏன் புதிதாய் புன்னகைகிறது ?
நீ புன்னகை எனும் ஸ்பரிசத்தால் துயில் எழுபியதாலோ?
என் உள்ளிருந்து பார்ப்பதும் உன் புன்னகைதானோ ?
என் மகனெனும் வரமே !!!
பிறந்ததிலிருந்து பார்க்கும் சூரியன்
எபோழுதும் பார்க்கும் மலை முகடு
இன்று மட்டும் ஏன் புதிதாய் புன்னகைகிறது ?
நீ புன்னகை எனும் ஸ்பரிசத்தால் துயில் எழுபியதாலோ?
என் உள்ளிருந்து பார்ப்பதும் உன் புன்னகைதானோ ?
என் மகனெனும் வரமே !!!
- செந்தில்குமார்
அன்னையின் ஆணை
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 4:46 AM | 0 commentsதொட்டு பார்க்க ஆசைதான்
தொட்டால் அழ மாட்டாயே ?
கொஞ்சம் அமைதியை - இரு
ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுத்து கொள்ளிகிறேன்
யாரிடமும் சொல்லிவிடதே
மிக முக்கியமாக - என்னவளிடம்
ஆம் வெளியிலிருந்து வந்தவுடன்
உன்னை தொட கூடாதம் - உன்
அன்னையின் ஆணை !!!
- செந்தில் குமார்
தொட்டால் அழ மாட்டாயே ?
கொஞ்சம் அமைதியை - இரு
ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுத்து கொள்ளிகிறேன்
யாரிடமும் சொல்லிவிடதே
மிக முக்கியமாக - என்னவளிடம்
ஆம் வெளியிலிருந்து வந்தவுடன்
உன்னை தொட கூடாதம் - உன்
அன்னையின் ஆணை !!!
- செந்தில் குமார்
Subscribe to:
Posts (Atom)