மௌனங்கள்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 8:44 PM | 0 commentsஉனக்கான மௌனங்கள் சில மணி துளிகள் நீடிக்கும் போது ,
பிரளயம் மூண்டதாய் உணரும் நீ ,
என் எல்லையில்லா அன்பினை மட்டும் ,
மௌனத்தால் வரையறுக்க சொல்ல்வதேன் ?
உன் மௌனத்தின் உள்ளர்த்தம் புரியாமல் மனதை புரட்டுகிறேன் .
மீனவ பெண்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 8:44 PM | 0 commentsஇப்போதெல்லாம் கனக்கிறது
நெஞ்சம் உன்னை வழியனுப்ப ,
மீண்டும் இப்படி ஒரு கணம் கிடைக்குமா
என்ற பயமும் கூட .
தண்ணீரில் நீ செல்ல கண்ணீரோடு
நாங்கள் காத்திருக்க .
யாரோ சொன்னார்கள்
மீன் பிடிக்க சென்றவர்களை காணவில்லையாம்
மீண்டும் நீ வருவாயோ ?
Posted by
செந்தில்குமார் இந்திரஜித்
|
8:42 PM
|
0
comments
இரு இதயங்களின் சங்கமத்தில் ,
தேடுகிறேன் என்னுள் புதைந்து விட்ட புன்னகையை.
நொடிகளுக்கு இடையே ஆன தொலைவும் ,
உயிர் வாங்குகிறது நீ மௌனித்தால்
இரு இதயங்களின் சங்கமத்தில் ,
தேடுகிறேன் என்னுள் புதைந்து விட்ட புன்னகையை.
நொடிகளுக்கு இடையே ஆன தொலைவும் ,
உயிர் வாங்குகிறது நீ மௌனித்தால்
காதல்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 8:42 PM | 0 commentsஇதோ என்னை கடந்து செல்கிறது எனக்கான தொடர்வண்டி ,
என்னை விடுத்து என் மனதை மட்டும் ஏற்றிக்கொண்டு.
நானும் கையசைத்து அனுப்பி வைக்கிறேன் .
கணத்த மனதின் கண்ணீர் துளிகள் தவறியும் காற்றில் விழாமல்.
மௌனங்கள்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 8:41 PM | 0 commentsஉன் மௌனங்கள் கொன்று குவித்த வினாடிகள்
ஒவ்வொன்றையும் கேள் எனது இதயத்தின் வலியை அது சொல்லும்.
சொல்லொன்னா துயரங்கள் மௌனங்களால் பரிசளிக்கபடுகின்றன .
Posted by
செந்தில்குமார் இந்திரஜித்
|
8:41 PM
|
0
comments
சிற்றளைகளின் சலனத்தில் மகிழ்ந்திருந்தேன் ,
சட்டென தோன்றிய பேரலை ஒன்று
கொண்ட மட்டும் தாக்கி விட்டு
ஏதும் அறியா பிள்ளையென அடங்கியது .
சிற்றளைகளின் சலனத்தில் மகிழ்ந்திருந்தேன் ,
சட்டென தோன்றிய பேரலை ஒன்று
கொண்ட மட்டும் தாக்கி விட்டு
ஏதும் அறியா பிள்ளையென அடங்கியது .
Posted by
செந்தில்குமார் இந்திரஜித்
|
8:40 PM
|
0
comments
எட்டாத உயரத்தில் கண்ட இரு விண்மீன்களை ,
தன்னுடைய உறவுகள் என்று மகிழ்ந்திருகிரதாம்
ஒரு மின்மினி பூச்சி,
விண்மீனின் பிரமாண்டம் தெரியாமல் .
எட்டாத உயரத்தில் கண்ட இரு விண்மீன்களை ,
தன்னுடைய உறவுகள் என்று மகிழ்ந்திருகிரதாம்
ஒரு மின்மினி பூச்சி,
விண்மீனின் பிரமாண்டம் தெரியாமல் .
காம கொலைகள்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 8:39 PM | 0 commentsமோகம் கொண்டு திரிகையில் தெரிந்ததில்லை
உனது நிலைப்பாடு பெற்றுடுத்த பின் தான் தெரிகிறதோ ?
நீ கொண்ட இச்சைக்கு ஞாயம் கற்பிக்க ,
முதல் மூச்சு கூட முழுதாய் விடாத பிஞ்சை கொல்வதா ?
பேராசை
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 8:39 PM | 0 commentsஒரு குழந்தை என உன் உள்ளங்கையில் அடங்கி உறக்கம் கொண்டு, என் உயிர் வலி கொள்ள பேராசை தான் .
நிராசைகள்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 8:37 PM | 0 commentsஇரு பெரு நதிகளின் சங்கம காட்டாற்றில்
விழுந்த சிற்றிலை என பயணிக்கிறேன்,
காட்டாற்றின் விதிகளுக்கு உட்பட்டு.
நானும் காட்டாரோ என்ற பிரம்மையில் ,
காட்டற்றிகோ என்னை கரை சேர்ப்பதில் கவனம் ,
எனக்கோ பயணிக்க ஆசை. என் செய்வேன் நான்
Subscribe to:
Posts (Atom)