மௌனங்கள்

| | 0 comments

உனக்கான மௌனங்கள் சில மணி துளிகள் நீடிக்கும் போது ,
பிரளயம் மூண்டதாய் உணரும் நீ ,
என் எல்லையில்லா அன்பினை மட்டும் ,
மௌனத்தால் வரையறுக்க சொல்ல்வதேன் ?
உன் மௌனத்தின் உள்ளர்த்தம் புரியாமல் மனதை புரட்டுகிறேன் .

மீனவ பெண்

| | 0 comments

இப்போதெல்லாம் கனக்கிறது
நெஞ்சம் உன்னை வழியனுப்ப ,
மீண்டும் இப்படி ஒரு கணம் கிடைக்குமா
என்ற பயமும் கூட .
தண்ணீரில் நீ செல்ல கண்ணீரோடு
நாங்கள் காத்திருக்க .
யாரோ சொன்னார்கள்
மீன் பிடிக்க சென்றவர்களை காணவில்லையாம்
மீண்டும் நீ வருவாயோ ?
| | 0 comments

இரு இதயங்களின் சங்கமத்தில் ,
தேடுகிறேன் என்னுள் புதைந்து விட்ட புன்னகையை.

நொடிகளுக்கு இடையே ஆன தொலைவும் ,
உயிர் வாங்குகிறது நீ மௌனித்தால்

காதல்

| | 0 comments

இதோ என்னை கடந்து செல்கிறது எனக்கான தொடர்வண்டி ,
என்னை விடுத்து என் மனதை மட்டும் ஏற்றிக்கொண்டு.
நானும் கையசைத்து அனுப்பி வைக்கிறேன் .
கணத்த மனதின் கண்ணீர் துளிகள் தவறியும் காற்றில் விழாமல்.

மௌனங்கள்

| | 0 comments

உன் மௌனங்கள் கொன்று குவித்த வினாடிகள்
ஒவ்வொன்றையும் கேள் எனது இதயத்தின் வலியை அது சொல்லும்.

சொல்லொன்னா துயரங்கள் மௌனங்களால் பரிசளிக்கபடுகின்றன .
| | 0 comments

சிற்றளைகளின் சலனத்தில் மகிழ்ந்திருந்தேன் ,
சட்டென தோன்றிய பேரலை ஒன்று
கொண்ட மட்டும் தாக்கி விட்டு
ஏதும் அறியா பிள்ளையென அடங்கியது .
| | 0 comments

எட்டாத உயரத்தில் கண்ட இரு விண்மீன்களை ,
தன்னுடைய உறவுகள் என்று மகிழ்ந்திருகிரதாம்
ஒரு மின்மினி பூச்சி,
விண்மீனின் பிரமாண்டம் தெரியாமல் .

காம கொலைகள்

| | 0 comments

மோகம் கொண்டு திரிகையில் தெரிந்ததில்லை
உனது நிலைப்பாடு பெற்றுடுத்த பின் தான் தெரிகிறதோ ?
நீ கொண்ட இச்சைக்கு ஞாயம் கற்பிக்க ,
முதல் மூச்சு கூட முழுதாய் விடாத பிஞ்சை கொல்வதா ?

பேராசை

| | 0 comments

ஒரு குழந்தை என உன் உள்ளங்கையில் அடங்கி உறக்கம் கொண்டு, என் உயிர் வலி கொள்ள பேராசை தான் .

நிராசைகள்

| | 0 comments

இரு பெரு நதிகளின் சங்கம காட்டாற்றில்
விழுந்த சிற்றிலை என பயணிக்கிறேன்,
காட்டாற்றின் விதிகளுக்கு உட்பட்டு.
நானும் காட்டாரோ என்ற பிரம்மையில் ,
காட்டற்றிகோ என்னை கரை சேர்ப்பதில் கவனம் ,
எனக்கோ பயணிக்க ஆசை. என் செய்வேன் நான்
| | 0 comments

அன்பெனும் ஆயுதத்தால் தாக்கி விட்டு
ஆயிரம் சமாதானம் சொல்ல்கிறாய் உன் மௌனதிற்காக
| | 0 comments

உயிரில் கலந்திட்ட உறவுகளின் அன்பின் முன் ஊமை ஆகிறேன் .
| | 1 comments

அடைமழை நின்ற போதும் நில்லா தூவனமாய் உன் நினைவுகள் .

நேசம்

| | 1 comments

உன்னுடனான நேசத்தில் தொலைந்தது நான் மட்டும் அல்ல
எனக்கான அன்பின் தேடலும் தான்.

காதல் கொண்டேன்

| | 1 comments

காதல் கொண்ட இரு இதயங்களை கண்டேன்
நானும் காதல் மேல் காதல் கொண்டேன்

ஆசை

| | 2 comments

நீ தினம் தினம் சாயம் பூசி அழகு பார்க்கும நகமாய்
பிறக்க ஆசை பட்டேன் ஒருநாள் நீ என்னை வெட்டி
குப்பையில் எரிவாய் என்பதை அறியாமல்

ஈரம்

| | 0 comments

உண்கண்ணில் மறைந்த ஈரம்(அன்பு)
என்கண்ணில் என்கண்ணில் கண்ணீராய் வந்ததடி

பிழை

| | 0 comments

பிறர் பிழை கண்டு பிழை கண்டு

உன் வாழ்வை ரணமாக்கி கொண்ட நீ

இதுவே உன் பிழை என்பதை எப்பொழுது அறிவாய்.

தமையன் எனும் தாய்

| | 0 comments

காய பட்ட இதயத்துக்கு
உன் அன்பெனும் மருந்திட்டாய்
நான் இளைப்பாற
உன் தோள் தந்தாய்
என்னை எனக்காக வாழ சொன்னாய்
தமையனாய் வந்து என்
துன்பம் கலைந்தாய்
தாயாய் வந்தென்னை ஆட்கொண்ட தமையா
மீண்டும் ஒரு ஜென்மம் எனில்
உனக்கு தனயனாகும் வரம் தா!!!

நிம்மதி

| | 0 comments

எங்கெங்கோ தேடினேன்
ஒவ்வொரு பொருளிலும்
உயிரிலும் தேடினேன்
தொலைத்த இடம் தெரியமல்
யாரோ சொன்னார்கள்
என்னுள் தான்
தொலைத்திருப்பேன் என்று
இருக்கலாம் ஆனால்
எனக்கு என்னுள் தேட
தெரியவில்லையே!!! .

மீண்ட சொர்க்கம்

| | 2 comments


கவலைகள் மறைய கண்டேன்
கண்ணீர் காற்றில் கரைய கண்டேன்
நீ தந்த பாசம் நெஞ்சில் உலவ கண்டேன்
உன் பாச துளிகள்
மீண்டும் என்னை உயிர்பிக்க கண்டேன்
எனக்கு பாசமெனும் தோள் தந்த
தமையா - உன்னால் !!!

காத்திருக்கிறேன்

| | 0 comments

ஊர் ,உறவு ,நட்பு புடைசூழ வாழ்த்திய போது
வசந்தத்தின் வாசல் திறந்து விட்டது என்றுதான் - நினைத்திருந்தேன்
வாசல் நுழையும் முன்னே புயல் ,
வரும் என்று யாரறிவார்!!!
நாம் நாளைய சரித்திரத்தில் இடம் பெற வேண்டாம்
என்னுள் நீ உன்னுள் நான் முழுதாய் வந்தமர்ந்தாள் போதுமடி
என்னுடைய விசும்பல்களை நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லைதான் - காரணம்
உன்னுள் இருபது நீ , நீ மட்டுமே
எனக்கும் சிறிது இடம் கொடுத்துப்பார் -அப்போது புரியும்
எனது அன்பும், காதலும்
வலிக்கிறதடி காரணம் நீயா இல்லை நானா ?
உன்னில் அன்பை தேடி -தேடி கனத்து விட்டது மனம்
காத்திருக்கிறேன் காலத்தை கண்ணீரில் - கரைத்து கொண்டு !!!
என்றேனும் புரிதல் தோன்றும் என்ற நம்பிக்கையில் .

ஞானத்தை தேடி

| | 0 comments

எல்லோருக்கும் ஞானம் பெற
ஆசைதான்
தேடவும் செய்கிறார்கள்
புத்தனின் போதனைகளை - அல்ல
அவர் ஞானம் பெற்ற
போதி மரத்தை தேடி
பாவம் இதில் போதி மரம்
ஏதும் செய்யவில்லை என்று
தெரியாமலேயே

காதல்

| | 0 comments

இதழ்கள் பேசும்
கண்கள் பேசும்
கைகள் கூட பேசும் - ஆனால்
இன்று தான் கூந்தல் பேச காண்கிறேன்
பெண்ணே நீ சிக்கெடுத்து வீசிய
கூந்தலுடன் நான் பேசும் போது
இது தான் காதலா?

- செந்தில் குமார்

மொழி

| | 1 comments

என்னது அன்பை சொல்ல ,
வார்த்தைகளை தேடினேன்
எதுவும் என் அன்பை சொல்வது போல் இல்லை.
நான் சொல்லாமலே என் அன்பை நீ அறிந்தாய்
பிறகு தான் தெரிந்தது அன்பை சொல்ல
வார்த்தை தேவை இல்லை ,உணர்வுகள் போதும் என்று .

- செந்தில்குமார்

புன்னகை

| | 2 comments

எத்தனை முறை தோற்றாலும் ,
மீண்டும் மீண்டும் தோற்கத்தான் தோன்றுகிறது,
உன்னிடம் மட்டும் - மகனே உன் புன்னகைகாக

- செந்தில்குமார்

புதிய புன்னகை

| | 0 comments

நேற்று பார்த்தே அதே ரோஜா
பிறந்ததிலிருந்து பார்க்கும் சூரியன்
எபோழுதும் பார்க்கும் மலை முகடு
இன்று மட்டும் ஏன் புதிதாய் புன்னகைகிறது ?
நீ புன்னகை எனும் ஸ்பரிசத்தால் துயில் எழுபியதாலோ?
என் உள்ளிருந்து பார்ப்பதும் உன்
புன்னகைதானோ ?
என் மகனெனும் வரமே !!!
- செந்தில்குமார்

அன்னையின் ஆணை

| | 0 comments

தொட்டு பார்க்க ஆசைதான்
தொட்டால் அழ மாட்டாயே ?
கொஞ்சம் அமைதியை - இரு
ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுத்து கொள்ளிகிறேன்
யாரிடமும் சொல்லிவிடதே
மிக முக்கியமாக - என்னவளிடம்
ஆம் வெளியிலிருந்து வந்தவுடன்
உன்னை தொட கூடாதம் - உன்
அன்னையின் ஆணை !!!

- செந்தில் குமார்